தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஸ்டுடியோ கிரீன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் முக்கியமானவை. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும் இணைந்து தயாரித்த படங்கள் அனைத்தும், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக மட்டும் இன்றி, வியாபர ரீதியாக வரவேற்பு பெறும் படங்களாகவும் இருப்பதால், இந்த கூட்டணிக்கு மவுசு அதிகம்
அந்த வகையில், ’அட்டகத்தி’, ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’, ‘பீட்சா 2 : வில்லா’, காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’ என இதுவரை ஆறு திரைப்படங்களை இணைந்து தயாரித்திருக்கும் இந்த நிறுவனங்கள், தற்போது ஏழாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளது.
இந்த வெற்றி கூட்டணியின் ஏழாவது படத்தை இயக்குநர் வடிவேலு இயக்குகிறார். கிராமிய நகைச்சுவை திரைப்படமான ‘அண்டாவ காணோம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வடிவேலுக்கு இது இரண்டாவது படமாகும்.
’கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘ஜாங்கோ’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...