பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது வர இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேறப் போவது யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஆரவ், ஹரிஷ் கல்யாண், சினேகன், கணேஷ் வெங்கட்ராம், சினேகன் என ஐந்து போட்டியாளர்கள் இருந்தாலும், இதில் நான்கு பேர் மட்டுமே 100 வது நாள் வரை செல்லப் போகிறார்ள். அதிலும், சினேகனுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டிருப்பதால் அவர் கட்டாயம் 100 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பார். அதேபோல், அனைவரையும் அணுசரித்து செல்லும் கணேஷ் வெங்கட்ராமும் 100 நாள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள மூன்று பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் ஆவார்.
ஏற்கனவே பிந்து மாதவி வெளியேறுவது போல புரோமோ வீடியோவில் காட்டப்பட்டு பிறகு அது வெறும் கண் துடைப்பு என்பது போல காட்டப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் ஹாரிஷ் கல்யாண் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவிக்கொண்டிருந்தாலும், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அதே சமயம், போட்டியாளர்கள் 5 பேரில் ஹரிஷ் கல்யாண், எந்த விதத்திலும் ரசிகர்களை கவராததால், அவரை தான் பிக் பாஸ் இந்த வாரம் வெளியேற்றப் போகிறார் என்று கூறப்படுகிறது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...