விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கோடியில் ஒருவன்’ வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் டி.டி.ராஜா, படத்தின் இயக்குநர் ஆனண்ட்ட்த கிருஷ்ணன், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா, நாயகி ஆத்மிகா, நாயகன் விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், டி.சிவா, விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன், “இந்த திரைப்படத்தின் கதையை பற்றி நான் ராஜா சார் அவர்களிடம் விளக்கினேன் .அதற்காக சில கோரிக்கைகளை முன்வைத்தேன் .இப்படத்திற்காக மிகப்பெரிய மக்கள் கூட்டமும் , கண்ணகி நகரில் பல லைவ் லொகேஷன்களில் படத்தை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தேன். எனக்கு விஜய் ஆண்டனி சாரின் கடின உழைப்பு ,தயாரிப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்பும் இத்திரைப்படத்தை விரைவில் உருவாக்க ,சிறப்பாக உருவாக காரணமாக இருந்தது. விதவிதமான வகைகளில் பாடல்களை மிகவும் அழகாக கொடுத்துள்ளார் நிவாஸ் கே பிரசன்னா.” என்றார்.
விஜய் ஆண்டனி பேசுகையில், “நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தப் இந்த படத்திற்கு பத்திரிகையாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் .இந்த படத்தின் பைனல் வெர்சனை பார்த்தேன். கண்டிப்பாக இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் .நான் இளையராஜா சாரை என்னுடைய முன்னோடியாக கொண்டு இசையமைக்க துவங்கினேன் .இந்த படத்திற்கு சிறந்த பாடல்களை கொடுத்த நிவாஸ் கே பிரசன்னா அவர்களை நான் பாராட்டுகிறேன் .அவர் இன்னும் பல உயரங்களை அடைவார். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இன்னும் சில காலத்தில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருவார். ஆத்மிகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை .அவர் இந்த படத்தில் சிறந்த நடிப்பையும், திறமையையும் காட்டியுள்ளார்.” என்றார்.
இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் பேசுகையில், “பல தடைகளை கடந்தது இந்த கொரோன காலத்தில் திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு கண்டிப்பாக உறுதுணையாக இருக்க வேண்டும். நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். விஜயகாந்த் சாரின் பிரதி தான் விஜய் ஆண்டனி படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “ராஜா ,தனஞ்ஜெயன் ஆகியோர் எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்தவர்களாகவும் திரைப்பட தொழில்நுட்ப குழுவிற்கு நம்பிக்கையானவர்களாகவும் இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி தொடர்ந்து திரைப்பட குழுவிற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறார் .குறிப்பாக இயக்குனருக்கு அளித்து வருகிறார். நிவாஸ் கே பிரசன்னா மெலோடி பாடல்களில் கில்லாடி .சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார். நடிகை சமந்தா போல ஆத்மிகாவும் தமிழ் சினிமாவில் வலம் வருவார். விஜய் ஆண்டனி ஒரு மனிதநேயமிக்க மனிதர் .குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஜயகாந்தை போல விஜய் ஆண்டனி. விஜயகாந்த் 52 புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தினார் .அதே வழியில்தான் விஜய் ஆண்டனியும் புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.” என்றார்.
தயாரிப்பாளர் டிடி ராஜா பேசுகையில், “அனந்த கிருஷ்ணன் என்னிடம் ஸ்கிரிப்டை சொன்னபோது அதில் ஏதோ ஒரு தனித்துவம் இருப்பதாக உணர்ந்தேன். இந்த மாதிரியான கதை கிட்டத்தட்ட 100லிருந்து 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த தேவைப்படும். ஆனால் இயக்குனர் 75 நாட்களில் படப்பிடிப்பு முடித்து என்னை ஆச்சரியத்தில் தள்ளினார் .இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஒரு திறமையான இசையமைப்பாளர். இப்படத்திற்காக அவர் ஒரு அற்புதமான படைப்பை வழங்கியுள்ளார். விஜய் ஆண்டனி நிஜவாழ்க்கையிலும் ஹீரோ தான் .இந்த கொரோன காலத்தில் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்த முதல் நடிகர் . மேலும் அவர் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் . அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் இதுவரை பணியாற்றிய நடிகைகளில் சிறந்த நடிகை ஆத்மிகா .இந்த படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.” என்றார்.
தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் பேசுகையில், “கோடியில் ஒருவன் படத்தை முதன் முதலில் எனக்கு விஜய் ஆண்டனி கூறியது இன்னும் நினைவிருக்கிறது. ஒரு தனித்துவம் வாய்ந்த படமாக இது இருக்கும். தன்னை ஒரு எடிட்டராக இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி .அவர் ஒரு படத்தை உருவாக்குவதில் முழு தகுதியையும் பெற்றுள்ளார் .தயாரிப்பாளர்களை நட்பாகவும் ,அன்பாகவும் வைத்திருப்பதில் சிறந்தவர் அனந்தகிருஷ்ணன். மற்றும் திரைப்படத்தை சிறப்பாக எடுத்து முடிக்கும் திட்டத்தை வகுப்பதில் திறமைசாலி. ஆத்மிகா ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாது நல்ல மனிதநேயம் உடையவர். படத்தின் புரோமோஷன் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்த திரைப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.”’ என்றார்.
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...