தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை நிகழாத ஒரு நிகழ்வாக ‘வாஸ்கோடகாமா’ பட பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. ஆம், 100 பிரபலங்கள் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்த ‘வாஸ்கோடகாமா’, 100 பிரபலங்கள் மூலம் தங்களது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டனர். அதன்படி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அதுல்யா ரவி, சுபிக்ஷா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ராம்குமார், இசையமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், ஊடகப் பிரபலம் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட
நடிகர், நடிகைகள் அரசியல் என பல்வேறு துறையைச் சேர்ந்த 100 பிரபலங்கள் இன்று (செப்.10) காலை 10:10 மணிக்கு ‘வாஸ்கோடகாமா’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
5656 புரொடக்ஷன் சார்பில் டத்தோ பி.சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இவர் மலேசியாவில் பல பெரிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார். இவர்களுடைய
கூட்டணியில் ஏற்கெனவே 'தேவதாஸ் பார்வதி ' படத்தின் பாடலை திரை உலகமே பாராட்டியது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ”என்னோட பாஷா...” பாடல் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது.
படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் கூறுகையில், “படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே படத்துக்கு 'வாஸ்கோடகாமா' என்கிற இந்தப் பெயர் வைக்கப்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதுதான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை. குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும் குணாம்சமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனையாக ஜாலியான காட்சிகளோடு சொல்லும் படம்தான் 'வாஸ்கோடகாமா'. இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். கதை பிடித்துப்போய் விட்டது. உடனே சம்மதம் கூறி அடுத்த நாளே ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு இந்தக் கதை அவரைக் கவர்ந்து விட்டது.” என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், முனிஸ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகி மற்றும் வில்லன் பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
வணிக ரீதியிலான, சுவாரஸ்யமான திரைப்படமாக உருவாக உள்ள ‘வாஸ்கோடகாமா’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...