Latest News :

விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவான ‘அனபெல் சேதுபதி’ - செப்டம்பர் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது
Wednesday September-15 2021

விஜய் சேதுபதி, டாப்ஸி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அனபெல் சேதுபதி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

ஃபேண்டஸி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் ஆகியோர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குநர் ஆர்.சுந்தரராஜனின் மகன் ஆவார்.

 

உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் கலந்துக் கொண்டு, தனது மகனும், இயக்குநருமான தீபக் சுந்தரராஜனை அறிமுகம் செய்து வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.சுந்தரராஜன், “நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உள்ளனர். எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக்கு படத்தின் கதை தெரியாது, படம் பற்றி எதுவும் தெரியாது, அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் எதிலும் தலையிடவில்லை. தயாரிப்பாளர் முழுப்படத்தையும் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக போன் செய்து சொன்னார் சந்தோஷமாக இருந்தது. இங்கு வந்து பாடல்கள் டிரெய்லர் பார்த்த போது அவனிடம் முதல் பட தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.  

 

Annabel Sethupathi

 

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் பேசுகையில், “தயாரிப்பாளர் தான் இந்தப்படம் இவ்வளவு பெரிதாக வரக்காரணம். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மேடம் என இப்படத்தில் என்னை நம்பி  நடித்த அனைவருக்கும் நன்றி. இப்படம் ஹாரர் இல்லை. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். உங்களது ஆதரவை தாருங்கள். அப்பாவிடம் மனித பண்புகளை தான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். இயக்கத்தை நான் இயக்குநர் AL விஜய்யிடம் தான் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து காமெடி படங்களே செய்ய ஆசை இல்லை, வித்தியாசமான களங்களில் படங்கள் செய்வேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை, தொடர்ந்து படங்கள் இயக்குவதில் தான் கவனம் செலுத்தவுள்ளேன்.” என்றார்.

 

விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி பண்ணு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, யோகி பாபு, மதுமிதா, ராஜ சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் உத்ரா , யுவனேஷ் மற்றும் அஷ்வின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

Related News

7732

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

Recent Gallery