தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் சரித்திர பிரம்மாண்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
தமிழ் சினிமாவின் பல படைப்பாளிகளில் திரைப்படமாக்க நினைத்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கிய போது பல தடைகளை எதிர்கொண்டாலும், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், என்ற மிகப்பெரிய சக்தி மூலம் அத்தனை தடைகளையும் தகர்த்தெரிந்து தற்போது சாதித்துள்ளார்.
ஆம், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்ததோடு, தாய்லாந்து உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இறுதியாக தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்ற படப்பிடிப்போடு முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், பலர் முயன்று முடியாமல் போனதை மணிரத்னம் செய்து முடித்ததால், ’பொன்னியின் செல்வன்’ மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...