Latest News :

முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது வென்ற ’ஷார்ட் கட்’ ஹீரோ!
Tuesday September-21 2021

மணி தாமோதரன் இயக்கியுள்ள ‘ஷார்ட் கட்’ திரைப்படத்தில் ஸ்ரீதர் நாயகனாக நடித்துள்ளார். மேலும், உபாசனா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ‘அறம்’ ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டொரொண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதோடு, சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்சனைகளை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் படத்தின் நாயகன் ஸ்ரீதர் சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது என இரு விருதுகளை வென்றுள்ளது.

 

இவ்விருது வென்றது குறித்து கூறிய நடிகர் ஸ்ரீதர், “எனது முதல் படத்திலேயே இந்த கவுரமிக்க விருது கிடைத்திருப்பது எனக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்த டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி.” என்றார்.

 

படத்தின் இயக்குநர் மணி தாமோதரன் கூறுகையில், “பணத்திற்காக வாக்குகளை விற்பது என்பது பணம் வாங்கிக் கொண்டு கழிப்பிடத்தை வாடகைக்கு விடுவதை போன்றதே. இதன் காரணமாகவே அரசியலும், நாடும் நாற்றமடைகிறது. இது தான் ஷார்ட் கட்டின் மையக்கரு. இதை ஜனரஞ்சகமான முறையில், மக்களுக்கு புரியும் வண்னம், அதே சமயம் அவர்கள் ரசிக்கும் விதத்தில் கூறியிருக்கிறோம்.

 

கையில் சுத்தமாக பணமே இல்லாத நான்கு பேர் திடீர் ‘ஞானோதயம்’ பெற்று அடுத்தவர்களை ஏமாற்றி ஒரே நாளில் எவ்வாறு கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பதை லாஜிக்குடன் சொல்லி இருக்கிறோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக 'ரெட் ஜெமினி' காமிராவை பயன்படுத்தி படம்பிடித்துள்ளோம்.” என்றார்.

 

மணி & மணி கிரியேஷன் தயாரித்துள்ள ‘ஷார்ட் கட்’ படத்தை எழுதி இயக்கியுள்ள மணி தாமோதரன் பாடல்களையும் எழுதியுள்ளார். கே.எம்.ரயான் இசையமைக்க, விஜய் கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விது ஜீவா படத்தொகுப்பு செய்துள்ளார். 

 

எம்.சிவராமன் தயாரித்துள்ள ‘ஷார்ட் கட்’ திரைப்படம் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

7746

”நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” - நடிகர் அஜித்குமார் அறிவிப்பு
Monday January-27 2025

மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

’பேட் கேர்ள்’ (BAD GIRL) திரைப்படம் க்ராஸ் ரூட் நிறுவனத்தை பெருமைப்பட வைக்கும் - இயக்குநர் வெற்றிமாறன் நம்பிக்கை
Monday January-27 2025

தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...

Recent Gallery