திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்த மக்களின் ரசனை தற்போது மாற தொடங்கியுள்ளது. இதனால், தனி இசை பாடல்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தனி இசை வீடியோ ஆல்பங்கள் தயாரிப்பில் பல முன்னணி இசை நிறுவனங்களும், முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இசை ஆல்பங்களில் மக்களிடம் பிரபலமாக இருக்கும் திரைப்பட நடிகர், நடிகைகளும் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில், பொழுதுபோக்குத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் சரிகமா, தனது சரிகமா ஒரிஜினல்ஸின் முதல் தென்னிந்திய இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. ‘என்ன வாழ்க்கடா’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இசை வீடியோ ஆல்பத்தில் ரக்ஷன், சுனிதா, ஸ்வஷ்திஸ்டா, ஜிபி முத்து ஆகியோர் நடித்துள்ளனர்.
டாங்க்லி இயக்கியுள்ள இப்பாடல் ஏ.பி.ஏ.ராஜா எழுத, எஸ்.கணேசன் இசையமைத்துள்ளார். பென்னி தயாள், விருஷா ஆகியோர் பாடியுள்ள இப்பாடலுக்கு அபு மற்றும் சால்ஸ் நடனம் அமைத்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சரிகமா மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைய்ன்ஸ் இணைந்து வழங்கும் இப்பாடல் நேற்று வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர்.
மேலும், நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற இப்பாடல் அறிமுக விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இப்பாடல் குறித்து சரிகமா நிறுவனம் சார்பில் பேசிய பி.ஆர்.விஜயலட்சுமி, “SAREGAMA இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமைமிக்க நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். புதிதாக SAREGAMA Originals எனும் அமைப்பு மூலம், தற்போது புதிய இசை திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். முன்பு ஒரு நிகழச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பள்ளியில் இருந்து இந்த குழுவை மும்பைக்கு அழைத்து போயிருந்தோம், அப்போது இவர்கள் செய்த கலாட்டா மறக்க முடியாதது. இப்போது கணேசன் முதலான அதே குழு, SAREGAMA Originals உடைய முதல் பாடலை செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...