விஜயின் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்த கான்ட்ரக்டர் நேசமணி, என்ற கதாப்பாத்திரம் அவர் நடித்த ஹைலைட்டான கதாப்பாத்திரங்களில் ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கான்ட்ரக்டர் நேசமணி கதாப்பாத்திரம் டிவிட்டரில் உலகளவில் டிரெண்டான நிலையில், இந்த தலைப்பில் உருவாகும் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜொடியாக ஓவியா நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ் இயக்கும் இப்படத்தை ‘வால்டர்’ படத்தின் இயக்குநர் யு.அன்பு மற்றும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்தி கே.தில்லை ஆகியோர் இணைந்து அன்கா மீடியா சார்பில் தயாரிக்கின்றனர்.
யு.அன்பு கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கிறார். சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பு செய்கிறார். ஏ.ஆர்.மோஹன் கலையை நிர்மாணிக்க, விக்கி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மெட்ராஸ் மீரான் பாடல்கள் எழுதுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல்.தேனப்பன், டி.சிவா, சக்திவேல், சி.வி குமார், சதீஷ், ஸ்ரீதர், முருகன், இயக்குநர்கள் விருமாண்டி, தாஸ் ராமசாமி, நவீன், தங்கம் சரவணன், முத்துக்குமரன், மனோஜ், நடிகர் சிபி சத்யராஜ், நடிகை ஷனம் ஷெட்டி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
படம் குறித்து கதையாசிரியரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான யு.அன்பு கூறுகையில், “இத்திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான சயின்ஸ் ஃபிக்ஷ்ன் ஜானரைச் சேர்ந்தது. இந்தப் படத்தில் யோகி பாபு முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு நடிப்பில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று சொல்லலாம். இந்தப் படம் சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் படமாகவுள்ளது. படத்திற்காக கொடைக்கானலில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...