நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தான் நடிக்கும் படங்கள் மட்டும் இன்றி, புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள், வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு அளித்து வருகிறார்.
அந்த வகையில், அமேசான் பிரைம் ஒடிடி தளத்திற்காக அவருடைய நிறுவனம் தயாரித்துள்ள நான்கு திரைப்படங்களில் ஒன்றான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் கடந்த 24 ஆம் தேதி அமேசானில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், அமேசான் ஒடிடி-யில் ’இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தை பார்த்த நடிகர் சூர்யா, படத்தையும், படக்குழுவினரையும் புகழ்ந்திருக்கிறார்.
இது குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”இந்த மாணிக்கம் எங்கள் இதயங்களை நிரப்பியது. அது உங்களையும் நிரப்பும் என்று நம்புகிறேன். நான், எங்கள் புதிய குழு எடுத்த ஆற்றல் மற்றும் முயற்சியில் பெருமைப்படுகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...