நடிப்பு மற்றும் தான் தேந்தெடுக்கும் கதாப்பாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டு தொடர்ந்து வெற்றிநடை போட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தமிழையும் தாண்டி தெலுங்கு, மலையாளம் உள்ளிட பிற மொழி சினிமாவிலும் ஜொலிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு அங்கீகாரங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்திருக்கிறது. ஆம், சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில், சிறந்த நடிகைக்கான இரு விருதுகள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்துள்ளது.
’சவுத் இந்தியன் இண்டர்நேஷ்னல் மூவி அவார்ட்ஸ்’ (South Indian International Movie Awards -SIIMA) என்ற பெயரில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் திரையுலக கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான சைமா விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்ப் படமான ’க/பெ ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ், ’வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ தெலுங்குப் படத்திற்காக விமர்சகர்கள் தேர்வுக்கான சிறந்த நடிகை விருதையும் வென்றுள்ளார்.
ஆக, ஒரே மேடையில், இரண்டு திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான இரு விருதுகளை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, வாழ்த்துகள் குவிந்து வர, அவரோ தனக்கு விருது வழங்கிய சைமா விருது குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...