Latest News :

ஷங்கரை தொடர்ந்து இந்த முன்னணி இயக்குநரும் மகளை நடிகையாக்குகிறார்
Monday September-27 2021

சினிமாவில் வாரிசுகளில் ஆதிக்கம் என்பது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. ஆனால், தற்போது பெண் வாரிசுகளை நடிகையாக களம் இறக்குவது அதிகரித்துள்ளது. இயக்குநர் ஷங்கரின் மகள், கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், மற்றொரு முன்னணி இயக்குநரும் தனது மகளை தமிழ் சினிமாவில் நாயகியாக களம் இறக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆம், பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன், தனது மகளை தமிழ் சினிமாவில் நாயகியாக களம் இறக்கப் போகிறாராம். 

 

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்களில் ஒருவரான ராஜீவ் மேனனுக்கு சரஸ்வதி மற்றும் லக்‌ஷ்மி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில், சரஸ்வதி என்பவர ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கி தயாரித்த ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

 

Rajiv Menon and Daughter Sarashwathi

 

இந்த நிலையில், சரஸ்வதி தமிழ் திரைப்படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம். இந்த படத்தில் நாயகனாக ‘தரமணி’ புகழ் வசந்த் ரவி நடிக்கிறாராம். இப்படம் குறித்த தகவல்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related News

7761

”நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” - நடிகர் அஜித்குமார் அறிவிப்பு
Monday January-27 2025

மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

’பேட் கேர்ள்’ (BAD GIRL) திரைப்படம் க்ராஸ் ரூட் நிறுவனத்தை பெருமைப்பட வைக்கும் - இயக்குநர் வெற்றிமாறன் நம்பிக்கை
Monday January-27 2025

தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...

Recent Gallery