உலகப்புகழ் பெற்ற மற்றும் உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய சினிமாவில் நடிகராக களம் இறங்குகிறார்.
தனது முதல் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த விஜய் தேவரகொண்டா, நடிப்பில் பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும் ‘லிகேர்’ (Liger) படத்தில் தான் மைக் டைசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் மேலும் பல சர்வதேச குத்துச்சண்டை வீரர்களும் நடிக்கிறார்கள்.
தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், இயக்குநர் கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
கலப்பு தற்காப்பு கலை (Mixed Martial Arts) நிபுணர் பற்றிய கதைக்களத்தைக் கொண்ட இப்பட்த்தில், அயர்ன் மைக் (Iron Mike) என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார்.
மேலும், ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு ஆகியோரும் இப்படத்தின் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...