புதிய சிந்தனையோடு உருவாகும் சிறு பட்ஜெட் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றி பெறுவதுண்டு. அப்படி வெற்றிப் பெற்ற படங்கள் பல உண்டு. அதில் ஒரு படமாக இணைய உள்ள படமாக உருவாகி வருகிறது ‘யாரது’.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிகர் நம்பிராஜ் இயக்கியுள்ள இப்படத்தை வி.ஆர்.இண்டர்நேஷனல் மூவிஸ் சார்பில் ஏகனாபுரம் ரவி தயாரிக்கிறார்.
இதில் நாயகனாக வி.ரவி நடிக்க, நாயகியாக மதுஸ்ரீ நடிக்கிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், பெசன்ட்நகர் ரவி, வையாபுரி, காளியப்பர், போண்டாமணி, பெஞ்சமின், விஜய்கிருஷ்ணராஜ், அனிதா, ஜானகி, ஜெயமணி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், படத்தின் மிக முக்கியமான வேடத்தில் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நடித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் நம்பிராஜ் கூறுகையில், “சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க மூவரால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இவர்களை சாட்சியுடன் கைது செய்ய இன்ஸ்பெக்டர் ரவி களம் இறங்குகிறார். ஆனால் அந்த மூவரும் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் கொலையாகின்றனர்.
ஏன்? எப்படி? என்ற கேள்விக்குறியோடு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இன்ஸ்பெக்டர் ரவி தீவிர விசாரணை செய்கிறார். அப்பொழுதுதான் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் ஒன்றுநடைபெறுகிறது. அது என்ன என்பதை, படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமல்ல, படம் பார்ப்பவர்களுக்கும் வியப்பூட்டும் வண்ணம் இந்தப் படம் இருக்கும்.” என்றார்.
சபேஷ் முரளி இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு செய்ய, ஆக்ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார். நோபல் நடனம் அமைக்கிறார்.
திண்டுக்கல், சின்னாளப்பட்டி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...