புதுமுகங்களின் உருவாக்கத்தில் அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கும் படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. ப்ளாக் காமெடி ஜானர் திரைப்படமான இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பாடியில் உள்ள க்ரீன் சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட டிரைலர் வெகுவாக கவர்ந்ததோடு, ’சூது கவ்வும்’ படத்தையும் நினைவுப்படுத்தியது. நலன் குமராசாமி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சூது கவ்வும்’ படத்திற்குப் பிறகு அப்படி ஒரு, கலகலப்பான காமெடி படமாக ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படம் இருப்பதாக, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்கள் பாராட்டினார்கள்.
ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா, அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.
படத்தின் இயக்குநர் பாலா அரன் பேசுகையில், “இப்படம் டார்க் ஜானரில் ஒரு புது முயற்சியாக செய்துள்ளோம். மூடர்கூடம், சூது கவ்வும் படங்கள் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இப்படம் எடுக்கப்பட்ட முழு அனுபவமும் மிக சவாலானதாக இருந்தது. இந்தப்படம் இந்த மேடைக்கு வர கேபிள் சங்கர், நலன் குமாரசாமி, ஞானவேல் ராஜா ஆகியோர் தான் காரணம். அந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். ” என்றார்.
தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா பேசுகையில், “8 வருஷம் முன்னால் நடந்த அட்டகத்தி வெளியீடு போலவே, இந்த வெளியீடு அமைந்திருக்கிறது. அனைத்து இயக்குநர்களும் இங்கு வந்து இந்தப்படத்தை வாழ்த்தியுள்ளார்கள். இந்தப்படத்தில் அட்டாகசமாக உழைத்துள்ள அனைவரும், அட்டகத்தி படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வளர்ந்திருப்பதை போல் மிகப்பெரிய அளவில் வளர்வார்கள். இந்தப்படக்குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும், அதை இந்தப்படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன். இந்தப்படம் முதலில் பார்க்கபோகும் போது வேறொருவர் வாங்கிவிட்டார்கள் என்றார்கள். பின்னர் எங்கெங்கோ சுற்றி என்னிடம் வந்தது, இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்த வகைப்படங்கள் எடுக்கும் அனைவருக்குமே உதாரணமாக இருப்பவர் நலன் தான். அவருடன் ஆர்யா நாயகனாக நடிக்க, அடுத்த மாதம் ஒரு படத்தை துவக்கவுள்ளோம். அது ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான புதிய அனுபவமாக இருக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசுகையில், “அட்டகத்தி எனக்கு மிகப்பெரிய பயணமாக இருந்தது. அதுமாதிரி தான் இந்தப்படமும், இக்குழுவினருக்கு அமைந்துள்ளது. கேபிள் சங்கர் மூலம் தான் இந்தப் படம் பார்த்தேன். முதலில் நான் ரிலீஸ் செய்ய முயற்சித்தேன். அப்போதைய காலகட்டத்தில் அது முடியவில்லை. பின்னர் ஞானவேல் ராஜா சாரிடம் படம் பார்க்க சொன்னேன். அவர் பார்த்து அவருக்கு பிடித்து, ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. இப்படத்தின் பட்ஜெட் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அளவு சின்ன பட்ஜெட்டில் எப்படி எடுத்தார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரி படங்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் நலன் குமாரசாமி பேசுகையில், “2 வருஷம் முன்னாடி டிரெய்லர் மட்டும் காட்டினார்கள், அப்போது பெரிதாக அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. இந்தப்படத்தை ரிலீஸ் செய்யும் ஞானவேல் சாருக்கு நன்றி. நாங்கள் குறும்படத்தில் செய்ததை முழு நீளப்ப்படமாக செய்யும் டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி புதிய முயற்சியில் வெளியாகும் படங்கள் சரியான அறிமுகத்தை பெற வேண்டும், அம்மாதிரியான அறிமுகத்தை இப்படம் பெற்றது மகிழ்ச்சி.” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “ஒரு மாதத்திற்கு முன் இப்படத்தை பார்த்து நிறைய ஆச்சர்யப்பட்டேன். இது ஒரு அசத்தாலான படம், ஓடிடிக்காக பார்த்த அனைவரும் இப்படத்தை பாராட்டினார்கள். 2 மணி நேரம் எப்படி போகிறதென்பதே தெரியாமல் விறுவிறுப்பாக இருக்கும். இந்தப்படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக ’பன்றிக்கு நன்றி சொல்லி’ படம் இருக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “படத்தில் இருந்து நல்ல காட்சியை போட்டு காட்டினார்கள். அதுவே மிக சுவாரஸ்யமாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள், இந்த திரைப்படகுழு பெரிய அளவில் ஜெயிப்பார்கள். எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிப்படங்களை தந்து வரும் ஞானவேல் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...