காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன், ‘பிக்கப் டிராப்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருவதோடு, அப்படத்தை இயக்கவும் செய்கிறார். இப்படத்தில் நாயகியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.
இப்படத்தின் புகைப்படத்தை வைத்து தான், பவர் ஸ்டாருக்கும் வனிதாவும் திருமணமாகி விட்டது, என்ற வதந்தியை கிளப்பி விட்டார்கள். இதையடுத்து பவர் ஸ்டார் மற்றும் வனிதா இருவரும் இணைந்து திருமண வதந்தி குறித்து விளக்கம் அளித்தார்கள்.
‘பிக்கப் டிராப்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இன்று பவர் ஸ்டார் சீனிவாசன், வனிதாவுடன் நடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு பவர் ஸ்டாரை அழைத்துச் சென்றனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு, திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...