Latest News :

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ - ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது
Thursday September-30 2021

இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி பல படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது ஒரு படத்தை இயக்கி, அதில் தானே முதன்மை கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ‘விநோத சித்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் வரும் அக்டோபர் 13 அ அம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

 

’லாக்கப்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘மதில்’, ‘ஒரு பக்க கதை’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட பல தரமான படங்களை வெளியிட்டு வரும் ஜீ5 தளத்தின் மற்றொரு தரமான மற்றும் சுவாரஸ்யமான திரைப்படமாக உருவாகியுள்ள ‘விநோத சித்தம்’ படத்தில் தம்பி ராமையா, முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

Vinodhaya Sidham

 

இப்படம் குறித்து சமுத்திரகனி கூறுகையில், “மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை  உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.” என்றார்.

 

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் படம் குறித்து கூறுகையில், “தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’. இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.” என்றார்.

Related News

7774

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery