விளையாட்டு வீரர்களைப் போல் சினிமா நடிகர்களும், பல விளம்பர படங்களில் நடித்து, கோடி கோடியாய் சம்பாதிப்பதுண்டு. ஆனால், தமிழ் சினிமாவை பொருத்தவரை இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதை முன்னணி நடிகர்கள் பலர் தவிர்த்து வந்தாலும், நடிகர் விஜய் உள்ளிட்ட சிலர் அவ்வபோது நடிக்கவும் செய்தார்கள்.
தற்போது கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினாலும், ரஜினி, அஜித், விஜயகாந்த் போன்ற நடிகர்கள், எப்போதும் விளம்பர படங்களில் நடிப்பதில்லை, என்ற கொள்கையோடு இருக்க, விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, விளம்பர படங்களாக இருந்தாலும் சரி, நல்ல சம்பளம் கொடுத்தால் நடிக்க ரெடியாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், அனில் சேமியா நிறுவன தயாரிப்புகளின் விளம்பர படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி, தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த பிரபல அடுக்குமாடி கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் நிறுவனம், சென்னை சோழிங்கநல்லூர் அருகே சுமார் 1693 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குறியிருப்புகளை கட்டுகிறது. இந்த திட்டத்தின் விளம்பர தூதராக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம், காசாகிராண்ட் நிறுவனம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வசதிகள் உள்ளிட்டவைகளை மக்களுக்கு சொல்லி, அந்த வீடுகளை விற்கும் பணியில் விஜய் சேதுபதி விரைவில் ஈடுபட உள்ளார்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...