தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சமந்தா, சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும், நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த சமந்தா, சில திரைப்படங்களில் மிக கவர்ச்சியாக நடித்தார். இதனால், அவருடைய குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கடந்த சில நாட்களாக சமந்தா, நாகசைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து சமந்தா மற்றும் நாகசைதன்யா தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் தாங்கள் பிரிந்ததை, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “எங்களின் நலன் விரும்பிகளுக்கும் இதனைச் சொல்லிக் கொள்கிறோம்.
நீண்ட யோசனைக்குப் பின்னர், நானும் நாகசைதன்யாவும் கணவன், மனைவியாக தொடரப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள் உறவுக்கு அடிப்படை. இனியும் கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும்.
இந்தக் கடுமையான காலகட்டத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...