தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் என்று தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டவராக வலம் வரும் சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் இப்படம், தொடங்கியதில் இருந்தே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘மாநாடு’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு 60 லட்சம் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனால், படம் வெளியீட்டுக்காக சிம்புவின் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்க, ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விரைவில் அறிவிக்க உள்ளார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இயக்குநர் ராம் இயக்கும் இப்படத்தில் நாயகனாக நிவின் பாலி நடிக்க, நாயகியாக அஞ்சலி நடிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தனுஷ்கோடியில் எளிமையான பூஜையுடன் தொடங்கியது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...