அதிரடி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான வித்யூத் ஜாம்வால், ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘சனக்’. விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
கனிஷ்க் வர்மா இயக்கியிருக்கும் இப்படத்தில் வித்யூத் ஜாம்வால், பெங்காலி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகை ருக்மணி மைத்ரா, நேகா துபியா, சந்தன ராய் சான்யல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
பணயக் கைதியை மையப்படுத்திய இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வரவைக்கும் வகையில் இருப்பது, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
வரும் அக்டோபர் 15 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள ‘சனக்’ படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் படம் குறித்து கூறிய நடிகர் வித்யூத் ஜம்வால், “இந்த திரைப்படம் கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் படமாக்கப்பட்டது. அனைவரையும் போல நாங்களும் இப்படத்தின் பணிகளுக்காக சென்றோம். இப்படத்திற்காக கடுமையாக உழைத்து, பணிகளை நிறைவு செய்தோம். நீங்கள் படத்தை பார்க்கும் போது உங்களை பற்றிய படைப்பாகவும், உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு உதவி செய்திடும் உத்வேகத்தையும் அளிக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன்.” என்றார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...