விஜய் - அஜித் இருவரும் பொது இடத்தில் சந்தித்துக்கொண்டால் நண்பர்களைப் போல் பழகினாலும் அவரது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் சமூக வலைதள பக்கத்தில் வார்த்தைகளையே ஆயுதமாக்கி அவர்கள் நடத்தும் யுத்தம் பாகுபலி போரையே மிஞ்சிவிட்டது.
இந்த நிலையில், விஜய்க்காக எழுதப்பட்டு, அவருக்கு ரொம்ப பிடித்த கதையில் அஜித் நடித்து வெற்றி பெற்றதோடு, அந்த படத்தின் மூலம் தனது வாழ்க்கை துணையையும் அவர் தேர்வு செய்து, வாழ்க்கையில் செட்டிலான தகவல் தற்போது கசிந்துள்ளது.
அதே தான், சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படம் விஜய்க்காக எழுதப்பட்ட கதையாம். அந்த கதையும் விஜய்க்கு ரொம்ப பிடித்துப்போக சில காரணங்களால், அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதால் தான் அஜித்தை நடிக்க வைத்ததாக இயக்குநர் சரண் கூறியுள்ளார்.
தனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் புரோமோஷனுக்காக டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் சரண் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அஜித்தை வைத்து நான்கு படங்கள் இயக்கியுள்ள சரண் மீது விஜய் ரசிகர்கள் பெரும் கோபத்தில் இருக்கும் நிலையில், தற்போது அவரது இரண்டாவது படமே விஜய்க்கான எழுதப்பட்ட கதை தான், என்ற தகவல் வெளியானதால் இயக்குநர் சரணை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்களாம்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...