ஸ்ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் வழங்க, அறிமுக இயக்குநர் சுந்தரவடிவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ரீ’. இதில் பிரசாந்த் சீனிவாசன், பிரசாத் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, காயத்ரி ரெமா, சங்கீதா பால் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
குடும்ப பின்னணியில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் மதுரையில் தொடங்கியது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்படவுள்ள ‘ரீ’ இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சைக்கோ திரில்லர் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் படமாக்கப்பட உள்ளது.
தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹரி இசையமைக்கிறார். நவீன் படத்தொகுப்பு செய்ய, முரளி நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். பாரதிராஜாவின் உதவியாளர் ராஜேந்திரன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...