வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவரான முனைவர் ஐசரி கணேஷ், தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் மூலம் இவர் பல வெற்றி படங்களை தயாரித்து வருவதோடு, பல படங்களை விநியோகமும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முனைவர் ஐசரி கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில், இந்த முறை இச்சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஐசரி கணேஷ், ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக ஐசரி கணேஷ், பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...