ஜாதி பற்றி பேசும் படங்களின் வருகையில் தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து பல சிறு முதலீட்டு படங்களை இயக்கி வரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான பகவதி பாலாவும் ஜாதியை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
‘இளம் ஜோடி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை மஞ்சுளா கிருஷ்ணப்பா வழங்க, சி.எம்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஓசூர் கிருஷ்ணப்பா தயாரித்துள்ளார்.
புதுமுகங்கள் விஜய் கிருஷ்ணப்பா, பிரியங்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆதிஷ் பாலா, மீரா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், பெஞ்சமின், வைகாசி ரவி, கர்ணா ராதா, ஜூனியர் அசோகன், போண்டா மணி, அம்பானி சங்கர், பரோட்டா முருகேசு, பட்டு மாமி ஆகியோர் நடிக்க, இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் பகவதி பாலா நடித்திருக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் பகவதி பாலா படம் குறித்து கூறுகையில், ”பணம் படைத்தவர்கள் மத்தியில் ஜாதியும் மதமும் கைகோர்த்து சிரிக்கிறது. பணம் இல்லாதவர்களிடம் தான் இந்த ஜாதியும் மதமும் அரிவாள், வேல்கம்பு கொண்டு அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகிறது என்பதை வீரம் கலந்த இளமை துள்ளலுடனும், அனல் தெறிக்கும் வசனத்துடனும், விறுவிறுப்பான சண்டை காட்சிகளுடனும் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.
தீப்பொறி நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் இப்பட்த்திற்கு தஷி இசையமைத்துள்ளார். சுதந்திரதாஸ், கவிதா குப்புசாமி, ஏகம்பவாணன் ஆகியோர் பாடல்கள் எழுத, ராம்நாத் படத்தொகுப்பு செய்கிறார். பவர் சிவா நடன காட்சிகளை வடிவமைக்கிறார்.
கிருஷ்ணகிரி, ஓசுர் மற்றும் பெங்களூரில் படமாக்கப்பட்டுள்ள ‘இளம் ஜோடி’ படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...