2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம் கொண்டான்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், அப்படத்தை தொடர்ந்து ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
மசாலா பிக்ஸ் என்ற தனது நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து இயக்கி வரும் ஆர்.கண்ணன், இயக்கத்தில் ‘காசேதான் கடவுளடா’ மற்றும் தள்ளிப் போகாதே’ ஆகிய இரண்டு படங்களில் உருவாகி வருகின்றன.
அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தள்ளிப் போகாதே’ படத்தில் அமிதாஷ், ஜெகன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் காளி வெங்கட், ஆடுகளம் நரேன், வித்யுலேகா ராமன், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இளை துள்ளும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் என்பதால், தமிழிலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘தள்ளிப் போகாதே’ படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் படம் குறித்து பேசிய இயக்குநர் ஆர்.கண்ணன், “நான் இந்த மேடையில் நிற்பதற்கு தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் சார் தான் காரணம். இன்று இயக்குநராக பத்துக்கு மேற்பட்ட படங்கள் இயக்கியிருப்பதோடு, படம் தயாரிப்பிலும் ஈடுபட்டு வெற்றிகரமாக பயணிப்பதற்கு அவர் தான் காரணம். அவருடைய சரியான திட்டமிடலை பின்பற்றி தான், நான் இயக்கி தயாரிக்கும் படங்களின் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
ஒரு படத்தை தொடங்கும் சரியான திட்டமிடலோடு தொடங்கினால், படப்பிடிப்பை குறுகிய நாட்களில் முடித்துவிடலாம். எப்படிப்பட்ட பெரிய படமாக இருந்தாலும் நான் 30 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுவேன். அதற்கு காரணம் சரியான திட்டமிடல் தான். இந்த திட்டமிடலை எனக்கு கற்றுக்கொடுத்த டி.ஜி.தியாகராஜன் சார், மணிரத்னம் சார் ஆகியோருக்கு நன்றி.
நான் டி.ஜி.தியாகராஜன் சாரிடம் படம் பண்ண கதை சொல்லிவிட்டு இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். 250 முறை கதை சொல்லியிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு முறையில் இயக்குநரானதால் தான் என்னால் இத்தனை படங்களை இயக்க முடிகிறது. ஆனால், இப்போது வருபவர்கள் ஒன்று இரண்டு படங்களில் பணியாற்றி விட்டு இயக்குநராகி விடுகிறார்கள். என்னிடம் பணியாற்றிய ஒருவர் வெறும் பத்து நாட்கள் பணியாற்றிவிட்டு படம் இயக்க சென்றுவிட்டார். அப்படி ஒரு அனுபவத்தை வைத்துக்கொண்டு அவர் எந்த மாதிரியான படம் எடுப்பாரோ, என்று தெரியவில்லை.
‘தள்ளிப் போகாதே’ அனைவருக்கும் பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரது கெமிஸ்ட்ரி மற்றும் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் அமிதாஷ் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.
நடிகர் அதர்வா பேசுகையில், “தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் பண்ண வேண்டும், என்று நான் விரும்பியதும் கண்ணன் சார் தான் என் நினைவுக்கு வந்தார். அவர் படத்தை வேகமாக எடுத்தாலும், மிக் அழகாக எடுக்க கூடியவர். இந்த படத்திற்காக நான் தாடி வளர்க்க வேண்டி இருந்தது. அதனால், ஒரு 20 நாட்கள் பிரேக் எடுத்துக்கொண்டேன். அப்போது தாடி வளர்ந்தது போதுமா? என்று கேட்பதற்காக கண்ணன் சாருக்கு போன் பண்ணேன், அங்கே சார்ட் கட் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவரிடம் அது குறித்து கேட்ட போது, ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன், என்றார். ஆச்சரியமாக இருந்தது. அவர் அப்படி தான் எப்போதும் வேகமாக இருப்பார். ஆனால், காட்சிகளை தரமாக எடுப்பார். இந்த படத்திற்கு கபிலன் சார் பாடல்களையும், வசனமும் எழுத ஒப்பந்தமானவுடன் படம் மிகப்பெரிய படமாக மாறிவிட்டது. அதேபோல், ஹீரோவுக்கு நிகராக வில்லன் வேடம் இருக்கும். அதற்கு சரியான நடிகரை நடிக்க வைக்க வேண்டும், என்று நினைத்தோம். எங்களின் எதிர்ப்பார்ப்பை அமிதாஷ் மிக சரியாக பூர்த்தி செய்திருக்கிறார். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.
கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு என்.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். ஸ்டண்ட் சில்வா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...