பிரபுதேவா, லாரன்ஸ், ராஜு சுந்தரம், பாபா பாஸ்கர் போன்றவர்கள் வரிசையில், நடன இயக்குநர் பாபி ஆண்டனியும் திரைப்பட இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
பிரபல நடன இயக்குநர் பாபி ஆண்டனி, இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பாலசரவணன், யுவலக்ஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, யோஹன் இசையமைக்கிறார். சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் குமார் கலையை நிர்மாணிக்கிறார். பாபி ஆண்டனியுடன் இணைந்து ஆண்டனி பாக்யராஜ் மற்றும் சவரி முத்து ஆகியோர் வசனம் எழுதுகிறார்கள்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...