குடும்பத்துடன் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படத்திற்கான உத்தரவாதம் கொடுக்கும் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் சுந்தர்.சி. இவரது படங்களால் ரசிகர்கள் மட்டும் இன்றி திரையரங்க உரிமையாளர்களும் பெரும் மகிழ்ச்சியடைவார்கள். அந்த வகையில், சுந்தர். சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், ‘அரண்மனை 3’ வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.
அரண்மனை இரண்டு பாகங்களை காட்டிலும் மூன்றாவது பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தில் ஆர்யா, இயக்குநர் சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாக்ஷி அக்கர்வால், யோகி பாபு, விவேக், மனோபாலா, சம்பத், மதுசூத்தன ராவ், வின்செண்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
படம் குறித்து பகிர்ந்துக்கொண்ட இயக்குநர் சுந்தர்.சி, ”அரண்மனை பாகங்கள் இரண்டும் நீங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. எல்லோரும் சொல்வார்கள் அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று, ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏற்கனவே உள்ள விஷயங்களை விட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது. அதற்கான கதையும், நடிகர்கள், தொழில்நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.
மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா. அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, ,சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.
அரண்மனை பாகம் 1 உதயநிதி அவர்கள் வெளியிட்டார். தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி அவர்கள் மட்டும்தான். அரண்மனை 1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான். தற்போது அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொன்னவரும் அவர்தான். என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படம்தான் .படத்தை பார்க்கின்ற சிறுவர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அரண்மனை இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
நடிகர் ஆர்யா படம் குறித்து கூறுகையில், “அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தில் நடிப்பதற்காக சுந்தர்.சி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை சந்தித்தேன் இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரிடம் சொன்னபோது பேய் படத்தில் எனக்கு எப்படி நடிப்பது என்று தெரியவில்லையே என்று கூறினேன். அது மிகவும் ஈசிதான் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். இப்படத்தில் விவேக் சாருடன் நடித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் பயணித்த அந்த 40 நாட்கள் மறக்க முடியாதவை. நான் அவரது மிகப்பெரிய ரசிகன். இந்த படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில் பாடல்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார் சத்யா. இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் உதயநிதி அவர்களுக்கு நன்றி. எவ்வளவு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை இந்த படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவேன், என்பதில் சுந்தர்.சி சார் உறுதியாக இருந்தார். அவர் நினைத்தது போலவே படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும்.” என்றார்.
நடிகை ராஷி கண்ணா பேசுகையில், “இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சுந்தர்.சி, குஷ்பூ ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா கடின உழைப்பாளி. அரண்மனை 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சார்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படத்தை வெளியிட்டு சப்போர்ட் செய்யும் உதயநிதி அவர்களுக்கு நன்றி. கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். தியேட்டரில் இப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.
இசையமைப்பாளர் சத்யா பேசுகையில், “இந்த படம் எனக்கு 25 வது படம். இசையமைப்பாளராக இசை அமைத்துள்ளேன். இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குந்ர் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த லாக்டவுன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை பட மற்ற பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகத்தில் எமோஷனல் சீன்கள் அதிகமாக இருக்கின்றன. காட்சிகளும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. நிச்சயம் இப்படம் ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்க்க கூடிய படமாக இருக்கும்.” என்றார்.
வரும் அக்டோபர் 14 ஆம் தேதி ‘அரண்மனை 3’ உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...