’குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ படங்களை இயக்கிய ராஜாமோகன் ‘அட்ரஸ்’ படத்தை இயக்கி வருகிறார். 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது அட்ரஸை தொலைத்த கிராமத்துக்கு ’அட்ரஸ்’ கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ராஜாமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
ராஜாமோகன், கதை திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற இளைஞன் வேடத்தில் அதர்வா முரளி நட்புக்காக நடித்திருக்கிறார். இவரது ஜோடியாக பூஜா ஜாவேரி நடித்திருக்கிறார். இவர்களுடன் இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினேகன், மோகன் ராஜன், கானா ஹரி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். தியாகு படத்தொகுப்பு செய்ய, சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பல காட்சிகள், கொடைக்கானலில் இருந்து 8 கிலோ மீட்டர் நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படமாக்கப்ப்ட்டிருக்கிறது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள படக்குழு விரைவில் டீசர் மற்றும் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...