தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ். ’ஜோக்கர்’, ‘அருவி’ உள்ளிட்ட பல மாறுபட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் தயாரிக்கும் 30 வது திரைப்படமும் மாறுபட்ட புதிய முயற்சியாக உருவாக உள்ளது.
சமந்தா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக உருவாகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் நெல்சன் வெங்கடேசன் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
பெண் கதாப்பாத்திரத்தை மையப்படுத்திய ஃபேண்டஸி ரொமாண்டிக் வகை திரைப்படமான இப்படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாகும். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இப்படம் உருவாகிறது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சமந்தா முதல் முறையாக நடிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...