‘த்ரிஷா இல்லனா நயந்தாரா’ என்ற அடல்ஸ் காமெடி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், பெரிய அளவில் எதிர்ப்பையும் எதிர்க்கொண்டது. இதையடுத்து, இதுபோன்ற படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என்று அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஜி.வி.பிரகாஷ்குமார் அறிவித்தார்.
இந்த நிலையில், ‘திரிஷா இல்லனா நயந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எடுக்கப் போவதாகவும் அதில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அப்படத்தின் மிகப்பெரிய தோல்வியால் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருக்க, அவருக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் வார்ய்ப்பளித்துள்ளாராம். அதன்படி ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ என்ற தலைப்பில் ஜி.வி.பிரகாஷை வைத்து படம் ஒன்றை இயக்கி வரும் ஆதிக் ரவிச்சந்திரன், அப்படத்தின் பெயரை ‘த்ரிஷா இல்லனா நயந்தாரா 2’ என்று மாற்ற முடிவு செய்திருக்கிறாராம்.
காரணம், இதுவும் ஒரு அடல்ஸ் ஒன்லி காமெடி படமாகவே உருவாகி வருகிறதாம்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...