இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரது கூட்டணியில் வெளியான படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் அறிவித்த நாள் முதலே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இயக்குநர் செல்வராகவன் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருவதால், ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது.
இந்த நிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் இந்துஜா நாயகியாக நடிக்கிறார்.
யாமினி யக்ன மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.கே.விஜய் முருகன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...