தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல்வேறு துறைகள் பல கட்டங்களை தாண்டி முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில், சினிமாத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஒடிடி தளங்களின் வளர்ச்சியால் பல புதிய முயற்சிகள் வெற்றி பெற்று வருகிறது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘மிஸ் இந்தியா’ திரைப்பட இயக்குநர் நரேந்திரநாத் யத்தனபுடி, டிஜிட்டல் தளங்களுக்கான திரைப்படம், வெப் தொடர்கள் மற்றும் யூடியூப் படங்களை தயாரிக்க ஆர்வமுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தளம் அமைத்துக் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக கோல்டன் டயமண்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கும் இயக்குநர் நரேந்திரநாத் யத்தனபுடி, டிஜிட்டல் சினிமா மீது ஆர்வமுள்ள இளைஞர்களுடன் கைகோர்த்து பயணிக்க இருப்பதோடு, பல புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பளித்து, டிஜிட்டல் சினிமாத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து கூறிய இயக்குநர் இயக்குநர் நரேந்திரநாத் யத்தனபுடி, “நான், எம்.பி.ஏ படிக்கும் போதே, இந்த திட்டம் எனது கனவுகளில் ஒன்றாக இருந்தது. இப்போது விஜயதசமி நன்னாளில், எனது கனவு திட்டமான இதை தொடங்குவதில் மகிழ்ச்சி.
எனது கோல்டன் டயமண்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், புதிய சிந்தனைகளுடன் சினிமாத்துறைக்கு வருபவர்களுக்கும் ஊக்கமளித்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவதை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. கிராமப்புற மற்றும் நகரப்புறத்தில் உள்ள நம் வாழ்க்கையில் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட கதைகளை படைப்பாக தயாரிக்க விரும்புகிறவர்களுக்கு எங்கள் நிறுவனம் சரியான வழிக்காட்டியாக இருக்கும்.
திறமையான நடிகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்காக கோல்டன் டயமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். அவர்களுக்கு இத்துறையில் எப்படிப்பட்ட தேவைகள் இருந்தாலும், அதை நாங்கள் முழுமையாக செய்துக்கொடுப்போம்.” என்றார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...