நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் மூலம் தயாரிக்கும் முதல் படத்தில் விஷால் நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாலம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு ‘லத்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான பல வெற்றிப் படங்களில் தயாரிப்பு தரப்பில் பணியாற்றிய ஏ.வினோத் குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ஏ.வினோத்குமாருடன் இணைந்து பொன் பார்த்திபன் வசனம் எழுதுகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயண் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் பிரபு நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
விஷால் நடிப்பில் ‘எனிமி’ தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், மற்றொரு படமான ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...