அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ தென்னிந்திய சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் பெறாத பெருமையை பெற்று வருகிறது. தலைப்பு டிரேட் மார்க், டிவிட்டர் எமோஜி என்று புதுவிதமான ரூட்டில் பயணிக்கும் ‘மெர்சல்’ படம் பலவிதமான சாதனைகளை நிகழ்த்தும் என்று விஜய் ரசிகர்கள் சொன்னது வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், அப்படத்தின் டீசர் பலவித உலக சாதனைகளை புரிந்துள்ளது.
ஏற்கனவே சமூக வலைதளமான டிவிட்டர் மெர்சல் படத்திற்கு பல விதத்தில் மரியாதை செய்துள்ள நிலையில், உலக அளவில் நம்பர் ஒன் வீடியோ சமூக தளமாக விளங்கும் யுடியுப், நடிகர் விஜய்க்கு புதிய பட்டம் ஒன்றை வழங்கியுள்ளது.
அதிக லைக்குகள் மற்றும் அதிக பார்வையாளர்களை பெற்று ‘மெர்சல்’ உலக சாதனை நிகழ்த்தியதை தொடர்ந்து, மெர்சல் நாயகனான விஜய்க்கு எபிக் தளபதி என்ற புதிய பட்டத்தை யுடியுப் நிறுவனம் வழங்கியுள்ளது.
விஜய்க்கு கிடைத்த இந்த கெளரவத்தை அவரது ரசிகர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடியதோடு, சமூக வலைதளங்களில் தங்களது தளபதிக்கு கிடைத்த பட்டப் பெயரை தெரிக்க விட்டும் கொண்டாடி வருகிறார்கள்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...