நடிகைகளை மையப்படுத்திய கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது ‘அரசி’ என்ற படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார்.
ரசி மீடியா மேக்கர்ஸ் மற்றும் வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை சூரிய கிரண் இயக்குகிறார். இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆவார்.
வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக்ராஜு சித்தார்த்ராய், சந்தானபாரதி, சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், கலக்கப்போவது யாரு சிவா, ஹரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு விபின் சித்தார்த் இசையமைக்க, செல்வா ஆர் ஒளிப்பதிவு செய்கிறார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்திய கதையம் கொண்ட இப்படத்தை காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்லப் போகிறோம், என்று இயக்குநர் சூரிய கிரண் தெரிவித்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (அக்டோபர் 19) பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...