ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மூலம் பல புதுமுக இயக்குநர்களை உருவாக்கியதோடு, பல வெற்றிப் படங்களை தயாரித்தும், பல புதிய முயற்சிகளை மாபெரும் வெற்றிகள் பெற செய்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மூலம் மீண்டும் பல திரைப்படங்களை தயாரிப்பதோடு, விநியோகம் செய்யவும் தொடங்கியுள்ளார்.
அதன்படி, ஜி.வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் ‘ஜெயில்’ படத்தை ஞானவேல்ராஜா, தனது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்து இசையமைத்திருக்கும் ‘ஜெயில்’ திரைப்படத்தில், ‘தேன்’ படத்தின் மூலம் பாராட்டு பெற்ற அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், 'பசங்க' பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர்.
க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்திற்கு அன்பறிவு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சாண்டி மற்றும் ராதிகா நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர். கபிலன், சிநேகன், கருணாகரன், தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடிய “காத்தோடு காத்தானேன்...” என்ற பாடல் யூடியூபில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்து பெரும் சாதனை படைத்ததோடு, படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது ஸ்டுடியோ க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...