ரசிகர்களின் ரசிகன், என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்த படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தில் ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
ஷில்பா கதாப்பாத்திரத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் விஜய் சேதுபதி தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
அதன்படி, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர், ’மும்பைகர்’ என்ற இந்தி படத்திலும், ‘தி பேலிமேன்’ வெப் சீரிஸ் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...