கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் போட்டியிட்டனர். இதில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 பேர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 138 பேர்களையும் நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தினார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நடிகர் விஜய் சார்பில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு, தளபதி அவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை பணிவோடு தெரிவித்துக்கொள்கிரேன்.
வெற்றி வாகை சூடிய மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தளபதி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை தீர்க்கும் நல்வாழ்வு பணியினை, தளபதி அவர்களின் உத்தரவுப்படி செவ்வனே செயல்படுத்தி, மக்கள் பணிகளை தொடருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலில் நடிகர் விஜயின் உருவப்படம் உள்ளிட்ட எந்த ஒரு அடையாளத்தையும் பயன்படுத்தாமல், விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...