Latest News :

தீபாவளி கொண்டாட்டமாக அமேசானில் வெளியாகும் ‘ஜெய் பீம்’
Wednesday October-27 2021

சூர்யா நடிப்பில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழகத்தின் பேசுப்பொருளாகியுள்ளது. இதற்கு காரணம் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் டிரைலர் தான். கூர்மையான வசனங்களும், நீதிமன்ற காட்சிகளும் நிறைந்த இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

 

சூர்யா முதல் முறையாக வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியான நாள் முதல், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்க, தற்போது படத்தின் டிரைலர் அந்த எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா உலா வரும் அதே வேளையில், பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ் எனப் பலரும் நடித்திருப்பார்கள். ஒரு நல்ல கதை பாதி வெற்றியைத் தரும். ஆனால் அதை கொண்டு சேர்க்க நல்ல நடிகர்கள் வேண்டும். அப்போது தான் உயிர் கிடைக்கும். ட்ரெய்லரைப் பார்க்கும் போதே நடிகர்கள் தங்கள் உழைப்பை முழுவீச்சில் பாய்ச்சியிருப்பதைக் காண முடியும்.

 

Jai Bhim

 

ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் தயாரித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தீபாவளி வெளியீடாக, நவம்பர் 2 ஆம் தேதியன்று அமேசானில் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதன் மூலம், உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் இப்படத்தை பார்க்க முடியும்.

 

மிக சக்தி வாய்ந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ காட்சிகளும் அது கடத்தும் உணர்வுகளும், அழுத்தமான வசனங்களும் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பது உறுதி.

Related News

7847

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

Recent Gallery