Latest News :

தனக்கென்று தனி பாதை அமைத்த ராகவா லாரன்ஸ் பிறந்தநாள்
Thursday October-28 2021

நடன கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், நடன இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராக வலம் வருகிறார். 

 

சென்னை, ராயபுரத்தில் 1976 ஆம் ஆண்டு 29 ஆம் தேதி லாரன்ஸ் பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த லாரன்ஸ் குழந்தையாக இருக்கும் போது அவருடைய மூளையில் கட்டி ஒன்று இருந்துள்ளது. அவருடைய அம்மா ஸ்ரீ ராகவேந்திரரர் சுவாமியை தரிசனம் செய்து வந்த நிலையில், லாரன்ஸின் மூளையில் இருந்த கட்டி மறைந்துவிட்டது. இதனால், ராகவேந்திர சுவாமியின் தீவிர பக்தரான லாரன்ஸ், தனது பெயரை ராகவா லாரன்ஸ் என்று மாற்றிக் கொண்டார்.

 

சிறு வயதில் தனக்கு இருந்த அபாரமான நடன திறமையால் பலரை ஈர்த்த ராகவா லாரன்ஸ், பிரபல சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயணிடம் உதவியாளராக பணியாற்றிய போது, அவருடைய நடன திறமையை கண்டு வியந்த நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சேருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து 1989 ஆம் ஆண்டு வெளியான ‘சம்சார சங்கீதம்’ திரைப்படத்தில் நடன கலைஞராக பணியாற்றியவர் தொடர்ந்து ‘உழைப்பாளி’, ‘ஜெண்டில் மேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடனக் கலைஞராக பணியாற்றினார். 

 

சிரஞ்சீவி நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘ஹிட்லர்’ என்ற தெலுங்குப் படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடன திறமையால் பல ஹீரோக்களை கவர்ந்தவர், தொடர்ந்து விஜய், அஜித், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகர்ஜுனா என முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர், நடிகர் அவதாரமும் எடுத்தார்.

 

1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பீட் டான்ஸர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான ராகவா லாரன்ஸ், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்’ தெலுங்குப் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் ‘முனி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

 

அவர் இயக்கி நடித்த முனி பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக ‘காஞ்சனா’ என்ற திகில் படத்தை இயக்கி நடித்தவர், அப்படத்தில் புதிய முயற்சியாக திகிலையும், நகைச்சுவையையும் ஒன்றாக சேர்த்து புதிய வகை ஜானர் திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை அமைத்தார்.

 

ராகவா லாரன்ஸ் அமைத்த அந்த புதிய பாதையில் தற்போது பலர் பயணித்துக் கொண்டிருந்தாலும், தனது காஞ்சனா வரிசை படங்கள் மூலம் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வரும் ராகவா லாரன்ஸ், சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கான இல்லங்களை நடத்தி வருபவர், திருநங்கைகளுக்காகவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களையும் சாதிக்க வைத்துக் கொண்டிருப்பவர், தன்னலம் கருதாமல் பிறருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

 

ஆன்மீகம் மீது பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், தனது அம்மாவுக்கு என்று தனி கோவில் ஒன்றை கட்டி, அக்கோவிலை அனைத்து அம்மாக்களுக்கும் அர்ப்பணித்துள்ளார்.

 

சினிமாவில் பல திறமைகளோடு பயணித்தாலும், தன்னால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்து வருவதோடு, பெற்ற தாய்க்கு கோவிலை கட்டி, தாயின் சிறந்த கோவில் இல்லை, என்பதை நிரூபித்த நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

Raghava Lawrence

 

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி மனிதத்தை நேசிக்கும் அனைவரும் கொண்டாடி வர, நாமும் அவரை வாழ்த்துவோம்.

Related News

7850

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

Recent Gallery