நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருடைய மனைவி லதா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல் நிலையில் திடீரென்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போனதால் தான் ரஜினிகாந்தை நேற்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டரியப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்தின் உடல் நிலையில் திடீரென்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவலால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதோடு, ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு படையெடுத்தும் வருகிறார்கள்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...