நடன கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், நடன இயக்குநராக பல படங்களில் பணியாற்றியதோடு, நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்கள் எடுத்து வெற்றிவாகை சூடினாலும் அவருடைய நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேறாமல் இருந்த நிலையில், அவருடைய பிறந்தநாளான இன்று (அக்டோபர் 29) அந்த கனவு நிறைவேறியுள்ளது.
தனது தம்பி எல்வினை கதாநாயகனாக கோலிவுட்டில் களம் இறக்க வேண்டும், என்பது ராகவா லாரன்சின் நீண்ட நாள் கனவு. தானே ஒரு இயக்குநர் என்றாலும், வேறு ஒரு முன்னணி இயக்குநர் படம் மூலம் தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும், என்று எண்ணிய ராகவா லாரன்ஸின் எண்ணம் தற்போது ஈடேறியுள்ளது.
லாரன்சின் தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இப்படத்தில் வித்தியாசமான சிறப்பு வேடம் ஒன்றில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...