Latest News :

இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவின் புதிய யுக்தி! - பிரமாண்டத்தின் உச்சத்தை தொட்ட ’காதி பட்டு’ விளம்பரம்
Saturday October-30 2021

நடிகர், கவிஞர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராக திகழும் இ.வி.கணேஷ்பாபு, ‘கட்டில்’ என்ற திரைப்படத்தை இயக்கி,தயாரித்து நாயகனாகவும் நடித்திருக்கிறார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வரும் ‘கட்டில்’ திரைப்படம் விரைவில்  தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு, ‘காதி கிராப்ட்’ நிறுவனத்தின் பட்டு புடவைகளுக்காக இயக்கியிருக்கும் விளம்பரபடம் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்டிருப்பதோடு, அனைத்து முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் திரையரங்குகளிலும் காண்போரை வியப்படைய செய்து வருகிறது.

 

எத்தனையோ பிரமாண்டமான விளம்பரப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தாலும், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு இயக்கியிருக்கும் காதிகிராப்ட் நிறுவனத்தின் பட்டு புடவை விளம்பரப்பாடல்  புதிய சிந்தனையோடு உருவாகியிருப்பது தான் அதன் தனி சிறப்பு.

 

காதிகிராப்ட் பட்டு புடவை தரத்தில் மட்டும் உயர்ந்தது அல்ல, அந்த புடவை நெய்யும் தொழிலாளர்களின் கைவண்ணத்தினாலும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. மிக நலிவடைந்த நெசவாளர்களால் நெய்யப்படும் காதி கிராப்ட் பட்டு புடவைகளை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும், அதை நெய்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 

எளியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பிரத்யேகமான அனைவரும் வாங்கும் விலைகளில் கிடைக்கும் காதி கிராப்ட் பட்டு புடவைகளின் மற்றொரு தனி சிறப்பு என்னவென்றால், 10 வருடங்களுக்குப் பிறகும், அந்த புடவைகளில் இருக்கும் வெள்ளி சரிகைகளின் மதிப்பு, புடவை வாங்கிய விலைக்கு சமமாக இருப்பதோடு, சில நேரங்களில் புடவை வாங்கிய விலையை விட கூடுதலான தொகையும் கிடைக்கும் என்பது உறுதி.

 

இத்தகைய தரம் வாய்ந்த காதி கிராப்ட் பட்டு புடவைகளை, வழக்கமான விளம்பர படங்களைப் போன்று அல்லாமல், புதிய சிந்தனையோடு படமாக்கியிருக்கும் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவின், புதிய முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

 

ஆம், சுமார் 1400 வருடங்கள் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் இந்த விளம்பர படத்தை இயக்குநர் கணேஷ்பாபு படமாக்கியிருக்கிறார். இதுவரை எந்த ஒரு திரைப்படம் மற்றும் விளம்பர படங்களின் படப்பிடிப்பும் நடந்திராத இக்கோவிலில் காதி கிராப்ட் பட்டு புடவையின் விளம்பர படத்தை இயக்குநர் கணேஷ்பாபு படமாக்கியிருக்கும் விதத்தையும், அக்கோவிலின் பிரமாண்டத்தையும் 40  வினாடிகளே ஓடும் இந்த விளம்பர படத்தைக்கண்டு பலர் வியப்படைந்ததோடு, அவரை தொடர்பு கொண்டு பாராட்டியும் வருகிறார்கள். 

 

எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து, எப்படிப்பட்ட விளம்பர படத்தை எடுத்தாலும், கணேஷ்பாபு இயக்கியிருக்கும் இந்த விளம்பர படத்தின் பிரமாண்டத்தை நெருங்க முடியாது. காரணம், இந்த விளம்பர படம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் படமாக்கப்பட்டிருப்பதால் பிரமாண்டத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.

 

விளம்பர படத்தை காட்சிப்படுத்தியதில் மட்டும் அல்ல, அதில் இடம் பெறும் பாடலை பதிவு செய்வதில் கூட, பாரம்பரியத்தை கடைப்பிடித்திருக்கிறார் இயக்குநர். பாடலை பாடிய மகதியை பட்டு புடவை அணிந்து பாட வைத்து மேக்கிங் வீடியோ எடுத்துள்ளார்.

 

Khadi Silk Saree Ad Film

 

பின்னணி பாடகியாக சுமார் 20 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருக்கும் பாடகி மகதி, எத்தனையோ திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களுக்காக பாடியிருந்தாலும், பாடல் பதிவின் போது இதுவரை சுடிதார் மற்றும் நவநாகரீக உடைகளை மட்டும் அணிந்து பாடியிருக்கிறார். காதி கிராப்ட் பட்டு புடவை விளம்பர படத்தின் பாடல் பதிவுக்காக  முதல்முதலாக புடவை அதுவும் பட்டு புடவை உடுத்தியிருப்பதும் பேசுப்பொருளாகியிருக்கிறது.

 

இந்த விளம்பர படத்தை இயக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு, அதில் இடம்பெற்றுள்ள பாடலையும் எழுதியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, சுமார் 120-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

கொரோனா காலங்களில் பல விழிப்புணர்வு பாடல்களை எழுதி இயக்கி வெளியிட்ட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு, தமிழக அரசுக்காக பல விழிப்புணர்வு படங்களை இயக்கி பலரது பாராட்டை பெற்றதோடு, ஒட்டு மொத்த விளம்பர உலகின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

Related News

7855

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

Recent Gallery