Latest News :

’எனிமி’ படத்தின் மீது விஷால் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை!
Saturday October-30 2021

விஷால் - ஆர்யா இணைந்து நடித்திருக்கும் ‘எனிமி’ படத்தை ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் விஷால், ஆர்யா, படத்தின் நாயகி மிர்னாலினி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் குறித்து நடிகர் விஷால் பேசியது, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

 

படம் குறித்து விஷால் பேசுகையில், ”நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முதலில் தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிகப்பெரிய பலம் அவர்தான். அவர் நினைத்திருந்தால் இப்படத்தை OTT இல் வெளியிட்டு அதிக லாபத்தை பார்த்தீர்களாம் . திரையரங்கில் மக்கள் ரசிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார். இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக இருக்கும். எது கிராபிக்ஸ், எது ஒரிஜினல் என்று கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளது. இந்த கதையை ஆனந்த் சங்கர் என்னிடம் சொன்ன போதே, இது மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நினைத்தேன். பிறகு அதை முழுப்படமாக பார்க்கும் போது, எந்த படத்துடனும் இந்த படம் மோதலாம், என்று தோன்றியது. அதனால் தான் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். நான் சொல்வது உங்களுக்கு சற்று அதிகமாக தோன்றலாம், ஆனால் அது தான் உண்மை.  பத்திரிகையாளர்களுக்கு ஒரு நாள் முன்பே படத்தை போட்டுக் காட்ட முடிவு செய்திருக்கிறோம். அதில் இருந்தே தெரியும் இந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று. நிச்சயம் ‘எனிமி’ மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

 

Vishal

 

நடிகர் ஆர்யா பேசுகையில், “இப்படத்தைப் பற்றி என்னிடம் முதலிடம் கூறியவர் விஷால். கதை கேட்கும்படி சொன்னார் .நானும் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன். கேட்டவுடன் இரண்டு கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது .எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது  என்று ஒரு குழப்பம் நிலவியது எனக்கு. படத்தில் எனக்காக சிறப்பு காட்சிகளும் மாஸ் காட்சிகள் அதிகமாக  வைக்க சொல்லி விஷால் கூறியுள்ளார் .வேறு யாரும் இப்படி சொல்வார்களா என்று எனக்கு தெரியவில்லை .நன்றி. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை நானும் விஷாலும் பார்த்தோம் .இப்படி ஒரு காட்சி இனி எங்களால் மீண்டும் நடிக்க  முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு பிரமாண்டமாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் மிகப்பெரிய பலம் .இப்படத்தின் காட்சிகள் சிங்கப்பூரில் எடுக்க வேண்டியிருந்தது .கொரோனா காரணமாக எடுக்க முடியவில்லை .அதனால் துபாயில் படத்தை எடுக்க முடிவு செய்தார் .துபாயில் எடுத்தால் மூன்று மடங்கு செலவாகும் என தெரிந்தும் எடுக்க முன்வந்தார். தீபாவளிக்கு ரஜினி சாரின் படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக அனைவரும் திரையரங்குகளில் படத்தை பாருங்கள்.” என்றார்.

 

இயக்குனர் ஆனந்த் சங்கர் பேசுகையில், “எனது முந்தைய இரு படங்களில் பசங்களை விட இப்படத்தில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். கண்டிப்பாக இந்த பாராட்டு ஷான் அவர்களுக்கு  போய் சேரும். நடிகை மிர்னாலினி ரவி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் .அவர் டிக் டாக் வீடியோக்கள் நிறையவே பார்த்து ரசித்து இருக்கிறோம் .அவரால் கண்டிப்பாக நடிக்க முடியும் என்று நம்பி படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம் .அவர் டான்ஸர் கூட. இப்படத்தின் பாடல்களை தமன் இசையமைத்துள்ளார் பின்னணி இசையை சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் .கைதி, விக்ரம்வேதா படத்தின் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்த பின்னணி இசை. அதனால் இப்படத்திற்கும் அவர்தான் பின்னணி இசை அமைக்க வேண்டும் என நினைத்தோம் .அதேபோல் எதிர்பார்ப்புகளை தாண்டி படத்தின் பின்னணி இசை அருமையாக வந்துள்ளது. இப்படம் சுலபமாக தற்போது வெளியேறுவதற்கு காரணம் தயாரிப்பாளர் வினோத் ,மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார் .அவர் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை. விஷால் சாருக்கு ஆக்சன் அதிக காட்சிகள் வைக்க வேணுடும் என்று பலர் கேட்டுக்கொண்டதால் அவருக்காக சில சிறப்பு ஆக்ஷன் காட்சிகளை படத்தில் வைத்துள்ளோம். ஆர்யா கடின உழைப்பாளி .மிகவும் எனர்ஜியான நடிகர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் RD சார் ஒளிப்பதிவுக்காக  தனி பாராட்டைப் பெறுவார். தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறோம்.” என்றார்.

 

தயாரிப்பாளர் வினோத்குமார் பேசுகையில், “என் திரையுலக வாழ்க்கையில் நான் தனுஷ் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன் .அவருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி முழுமையாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஒப்படைத்தார் .அதன் மூலம் 14 படங்களை  தயாரித்து . தயாரிப்பு ,தயாரிப்பு மேற்பார்வை ஆகியவற்றை முழுமையாக கற்றுக் கொண்டேன். அடுத்ததாக இப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஷால் ,ஆர்யாவுக்கும் இயக்க முன்வந்த ஆனந்த் சங்கருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அதிக செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது ,அதற்கான ரிசல்ட் இப்படத்தின்  வெளியீட்டில் தெரியும் என நினைக்கிறேன் .அனைவரது ஆதரவும் தேவை.” என்றார்.

 

இதில், கதாநாயகியாக டிக் டாக் புகழ் மிர்னாலினி ரவி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இப்படத்திற்கு தமன் இசையமைக்க, பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ரவிவர்மா சண்டைகாட்சிகளை வடிவமைத்துள்ளார். ரெய்மாண்ட் டெரிக் க்ரஸ்ட்டா படத்தொகுப்பு செய்துள்ளார்.

Related News

7857

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

“சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்” - இயக்குநர் என்.ராஜசேகர்
Friday November-15 2024

7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் என்...

Recent Gallery