முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் ‘தேசிய தலைவர்’. இதில் முத்துராமலிங்க தேவர் கதாப்பாத்திரத்தில் ஜே.எம்.பஷீர் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எம்.பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை ஆர்.அரவிந்த்ராஜ் இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சினேகன் பாடல்கள் எழுத, அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ‘தேசிய தலைவர்’ படக்குழுவினர் அக்டோபர் 30 ஆம் தேதியன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் ”தேவரை போல யாரும் பிறக்கவுமில்லை, பிறக்க போறதுமில்லை...” என்ற பாடல் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜே.எம்.பஷீர், “தேசிய தலைவர் படம் எப்படி உருவானது என்றால், என்னுடைய நண்பர் சவுத்ரி தான் என்னிடம் இதை கூறினார். இந்த படத்தை இயக்க அரவிந்தராஜ் சாரிடம் பேசினேன். பிறகு எனக்கு கெட்டப் போட்டு பார்க்கப்பட்டது. இதில் ஒவ்வொரு விஷயத்திலும் தேவரய்யாவின் ஆசி இருந்தது. சில சமயம் இந்த படம் நடக்க முடியாமல் போகவிருந்த நேரத்தில் எனக்காவும் தேவரய்யாவுக்காகவும் என்னுடைய நண்பர்கள் ஜல்லிகட்டு மூவிஸ் என்ற கம்பெனியை இந்த படத்துக்காக உருவாக்கினர்கள். எம்.எம்.பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி இணைந்து இந்த படத்தை எடுக்க முன் வந்தார்கள் எத்தனை செலவானாலும் பரவாயில்லை இந்த படத்தை எடுங்கள் என்று சொன்னார்கள். இயக்குனர் இமயம் பாரதிராஜா சார், இசைஞானி போன்ற பெரிய ஜாம்பாவன்களை அய்யா இந்த படத்தில் தானாக சேர்த்துக்கொண்டார். இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அய்யா சமாதிக்கு சென்று ஆசி பெற்று படத்தை தொடங்கினோம். தமிழ் சினிமா வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் இஸ்லாமியானாக பிறந்து சினிமாவில் நிறைய பயணித்திருக்கிறேன். எங்கும் ஒரு பெரிய ஓபனிங் கிடைக்கவில்லை. அப்போது அய்யாவின் கதாபாத்திரம் எனக்கு அமைந்தது. நூறு படம் நடித்திருந்தால் கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்காது. ஐய்யாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்று என் தலையில் எழுதி இருக்கிறது அதனால் நடிக்கிறேன். தேவர் ஐய்யாவின் மறைக்கப்பட்ட வரலாற்றை எங்கும் தவறு செய்யாமல் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.
இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் பேசுகையில், “இன்றைக்கு நமது கதையின் கதாநாயகன் மறைந்த தேவரய்யாவின் 114 பிறந்த நாள். இந்நாள் ஒரு சிறப்பான நாளாகும். அவர் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரே நாள். ஒரு சிலருக்குத்தான் இந்த பாக்யம் கிடைக்கும். குருவுக்கும் சித்தருக்குதான் இதுபோன்ற நாள் கிடைக்கும் என்கிறார்கள். அவர் ஒரு சித்தராக வாழ்ந்தார். அதனால் தான் அவரது பிறந்த நாளையும் இறந்த நாளையும் தேவரின் குரு பூஜை என்று சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தேவர் என்று சொன்னாலே இன்றைய இளைஞர்களுக்கு தேவர் பெயர் கேள்வி பட்டிருக்கிறேன், நந்தனத்தில் சிலை இருக்கிறது. என்பது மட்டும் தான் தெரிகிறது. ஆனால் தேவரய்யா இந்திய விடுதலைக்கு அவரது பங்கு எப்படிப்பட்டது, அரசியலில் நேர்மையான, உண்மையான, தூய்மையான அரசியல்வாதியாக அவர் தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார் என்பதையெல்லம் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமான விஷயம்.” என்றார்.
டத்தோ ராதாரவி பேசுகையில், “இப்படத்தில் நாயகனாக நடிக்கும் பஷீருக்கு என்னுடைய நன்றி கூறிக்கொள்கிறேன். எல்லாவற்றையும் கடந்து எல்லோரும் தேசிய தலைவர் படத்தில் இணைந்திருக்கிறோம். இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையாஜா இணைந்திருப்பது வரப்பிரசாதம் இப்படத்தில் இடம் பெரும் தேவரய்யா பாடல் வைரலாகி விட்டது. சினேகன் அற்புதமாக எழுதி இருக்கிறார். என்னுடைய வீட்டில் தேவரய்யா படத்தை வைத்து கும்பிடுகிறேன். முத்துராமலிங்க தேவர் அய்யா படத்தை நான் ஏன் கும்பிடுகிறேன் என்றால் அவர் ஒரு வீரம் விளைந்த மண். முத்துராமலிங்க தேவர் சாதாரணமாகத்தான் பேசுவார், மரியாதையாக பேசுவார். தேவரய்யா இனத்துக்கே பெரிய வீரமுண்டு. தேசிய தலைவர் படத்தில் வக்கீலாக நடிக்கிறேன். தேவரய்யாவை விடுதலை செய்ய வாதாடும் வக்கீலாக நடிக்க வேண்டுமென்றார்கள் அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நந்தனத்திலும் மதுரையில் இருக்கும் தேவரய்யா சிலையில் கம்பீரமாக இருக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் எம்.எம்.பாபு பேசுகையில், “தேசிய தலைவர் படத்தை மக்களிடம் கொண்டு சென்று பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...