தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பதை தமிழகமே அறிந்த ஒன்று தான் என்றாலும், இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்? என்பதை யாரும் இதுவரை அறியவில்லை. இருந்தாலும், இந்த போட்டியில் கணேஷ் வெங்கட்ராம் அல்லது சினேகன் இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் டைடிலை சொந்தம் கொண்டாடப் போகிறார்கள் என்பது உறுதியான ஒன்று.
இந்த நிலையில், ஐந்து போட்டியாளர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று பிக் பாஸ் அறிவித்த நிலையில், வாரத்தின் இறுதி நாட்களில் அல்லாமல், வாரத்தின் நடுவில், அதாவது நேற்று (வியாழக்கிழமை) ஒருவர் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸின் இந்த உடனடி வெளியேற்றத்திற்கு காரணம், நிகழ்ச்சி மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் நோக்கம் தான்.
சரி, இது விஷயமல்ல, நேற்று வெளியேற்றப்பட்ட பிந்து கண்கலங்கியபடி எல்லோரையும் கட்டிப் பிடித்துக்கொண்டார். அவருக்கான பெட்டி வந்தது. சினேகன் ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினார். பிந்து வந்து அவரைக் கட்டியணைத்துச் சமாதானம் செய்தார். சினேகனை கட்டிப்பிடி வைத்தியர் எனக் கூறிவந்த நிலையில் நேற்று அனைவருமே அந்த நிலைக்கு மாறியிருந்தனர்.
பிந்து நான்கு பேரையும் திரும்பத் திரும்பக் கட்டிப்பிடித்துச் சமாதானப்படுத்திவிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கே நேற்று வெகுநேரம் பிடித்தது. அதிலும் ஆரவ்வை ரொம்ப நேரமாக விடாமல் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார் பிந்து மாதவி.
சொல்ல போனால் ஓவியாவால் காதலிக்கப்பட்ட ஆரவ், ஓவியா வெளியேறும் போது எந்தவித ரியாக்ஷனையும் காட்டாதவர், பிந்து வெளியேறும் போது கதறி அழுதுவிட்டார். அவருக்கு ஏற்றவாறு பிந்துவும் அவரை நெடு நேரமாக கட்டி தழுவிக்கொண்டிருக்க, “ஓவியாவுக்கு கிடைக்காத ஆரவ் பிந்துவுக்கு கிடைத்து விட்டாரோ!” என்று அனைவரையும் நேற்றைய நிகழ்ச்சி அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...