நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தற்போது ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், ’விக்ரம்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன், கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஃபஹத் பாசில், நடன இயக்குநர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
நவம்பர் 7 ஆம் தேதி தான் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் என்றாலும், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு அவருடைய பிறந்தநாளை கொண்டாட ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...