அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இதில் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்க, வில்லனாக பிரபல கன்னட நடிகர் தனன்ஜெயா நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, குணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் அத்வைத், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை முடித்ததோடு, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் படங்களில் பணியாற்றியுள்ளார். இப்படி ஒரு பின்னணி கொண்டவர் என்பதால் என்னவோ, தனது முதல் படத்தை மிகப்பெரிய ஆக்ஷன் திரைப்படமாக இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படக்குழுவினர் நேற்று (நவ.01) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
படம் குறித்து பேசிய நடிகர் விக்ரம் பிரபு, ”இந்த படத்தின் தொடங்கிய போது தான் கொரோனா பாதிப்பு உச்சமடைந்தது. இருந்தாலும், இந்த படத்தில் பல நல்ல விஷயங்கள் நடந்தது. இயக்குநர் கார்த்திக் அத்வைத் ஒரு இயக்குநராக அல்லாமல், ஒரு ரசிகராக இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பொதுவாகவே எனக்கு ஆக்ஷன் படங்கள் தான் பிடிக்கும். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆக்ஷன் காட்சிகள் மிக வித்தியாசமாக அமைந்துள்ளது. அதுமட்டும் இன்றி இந்த படத்திற்கு ஒளி ரொம்பவே முக்கியம். அதை மிக சரியாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். வாணி போஜன் எப்பவுமே சிரித்த முகத்தோடு இருப்பார். அவருடைய அமைதியான முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம், என்று தோன்றும். படத்திற்காக அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் பிரமாண்டமான ஆக்ஷன் படமாக இருக்கும்.” என்றார்.
இயக்குநர் கார்த்திக் அத்வைத் பேசுகையில், ”இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. படம் நன்றாக வந்திருக்கிறது. தயாரிப்பாளருக்கு நன்றி. விக்ரம் பிரபு சார் கடின உழைப்பை தந்திருக்கிறார். வாணி போஜன் மற்ற நட்சத்திரங்கள், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், இசை அமைப்பாளர் சாகர் எல்லா டெக்னிஷியன்களும் சிறப்பான பணி அளித்திருக்கிறார்கள். இந்த படம் ஆக்ஷன் ஜானர் என்றாலும், குடும்ப செண்டிமெண்டோடு கலந்த ஆக்ஷன் என்பதால் நிச்சயம் படம் அனைத்து தரப்பினருக்குமான படமாக இருக்கும்.” என்றார்.
நடிகை வாணி போஜன் பேசுகையில், “தயாரிப்பாளர் அவர்களுக்கு பெரிய நன்றி. இயக்குநர் கார்த்திக் என்னிடம் கதை சொல்ல வந்த போது பாதி தெலுங்கு, பாதி தமிழில் கஷ்டப்பட்டு சொன்னார். அது புரிந்தது. அதே சமயம் அங்கிருந்து இங்கு வந்து படம் செய்ய வேண்டும் என்று கடினமாக உழைத்திருக்கிறார். அவருக்கு பெரிய நன்றி. எந்த ஒரு படத்துக்கும் நான் காஸ்டியூம் மேக்கப் எல்லாம் அதிகம் பார்த்தது கிடையாது. ஆனால் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் காஸ்டியூமிலிருந்து மேக்கப்பிலிருந்து எல்லாவற்றையும் நுணுக்கமாக பார்த்தார். அதனால் நானும் ஆர்வம் காட்டினேன். அவருக்கும் நன்றி. விக்ரம் பிரபு ஸ்டார் குடும்பத்திலிருந்து வந்தவர். எப்படி இருப்பாரோ, என்ன பேசுவாரோ, என்று பயந்தேன். ஆனால் அவர் மிகவும் அன்பாக பழகினார். அவரிடம் பணியாற்றியது அவ்வளவு சவுகரியமாக இருந்தது. எந்தவொரு பந்தாவும் அவரிடமில்லை. காதல் காட்சிகள் நடிக்கும் போதும் எதுவாக இருந்தாலும் கேட்டுவிட்டு தான் நடிப்பார். விவேக் பிரசன்னா இந்த படத்தில் ஒரு வேடம் செய்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். மொத்த படக்குழுவுமே ரொம்ப கஷ்ட்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். விக்ரம் டே அண்ட் நைட் வேலை செய்திருக்கிறார். எல்லோருமே கடின உழைப்பு தந்திருக்கிறார்கள்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேசுகையில், “பரியேறும் பெருமாள் படத்தில் பணியாற்றினேன். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்புதான் அடுத்தடுத்து எந்த மாதிரியான படங்களில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. எனவே வழக்கமான படங்களை செய்ய எண்ணுவதில்லை. ஆனால் எல்லோரும் நல்ல இண்ட்ரஸ்டிங்கான கதைகள் சொல்கிறார்கள். கொரோனா காலகட்ட இடைவேளையில் தான் இயக்குநர் கார்த்திக் என்னை தொடர்புகொண்டு படம் செய்யலாமா? என்றார். ஒப்புக் கொண்டேன். ’பாயும் ஒளி நீ எனக்கு’ பட கதையை கேட்டேன். விஜய் சார், அஜீத் சார் படம் போல் பெரிய படமாக இருந்தது. இது ஆக்ஷன் படம். எல்லா ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ஆக்ஷன் படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு நன்காவது படத்திலேயே இப்படி அமைந்தது. நம்பவே முடியவில்லை நன்றாக தயாராக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இயக்குநருடன் நல்ல நட்பு இருந்தது. இருவரும் படம் எப்படியெல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்று பேசினோம். வழக்கமான ஆக்ஷன் மசாலா படம் போல் இல்லாமல் உலக அளவிலான படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்கள் இருவரின் எண்ணம் ஒன்றுபோல் இருந்தது. அதற்கான படத்தில் லைட்டிங் எப்படி இருக்க வேண்டும், காஸ்டியூம் எப்படி இருக்க வேண்டும், புரடக்ஷன் டிசைன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்த்து செய்தோம். படத்தில் ஆறேழு சண்டை காட்சிகள் இருக்கும். அதுவும் ஒன்று போல் இருக்கக்கூடாது என்று எண்ணினோம். அதற்காக நாங்கள் மட்டும் அல்ல, விக்ரம் பிரபு, வாணி போஜன் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் மிக கடினமாக உழைத்திருக்கிறார்கள்.” என்றார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...