சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘அரண்மனை 3’, அதன் முந்தைய இரண்டு பாகங்களைப் போல் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ‘அரண்மனை 3’ படம் ஜீ5 ஒடிடி தளத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படம் மற்றும் வெப் தொடர்களை தயாரித்து வரும் ஜீ5, ‘மலேஷியா டூ அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’, ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல தரமான தமிழ்ப் படங்களை வழங்கி வரும் நிலையில், ரசிகர்களை அதிகம் கவர்ந்த திரைப்படங்களில் ஒன்றான ‘அரண்மனை 3’ படத்தை வெளியிடுவதோடு, மேலும் பல கமர்ஷியல் திரைப்படங்களை அடுத்தடுத்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...